திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே, சேதமடைந்த புதிய தார் சாலை, நியூஸ் தமிழ் செய்தி எதிரொலியாக, உடனடியாக சீரமைக்கப்பட்டது. முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ், பாலானந்தல் - மட்டப்பாறை கிராமங்களுக்கு இடையிலான ஒன்றரை கிலோ மீட்டர் நீளமுள்ள தார் சாலை 38 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டது. தரமற்ற முறையில் சாலை அமைத்ததால், ஒரு சில மாதத்திலேயே ஜல்லிகள் பெயர்ந்தது. இதுகுறித்து நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்த நிலையில், சேதமான பகுதிகள் சீரமைக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : திண்டுக்கல் கூட்டுறவு சார்பதிவாளர் அன்பரசன் மீது புகார் கூட்டுறவு சங்க செயலாளர்களை மிரட்டியதாக தகவல்