சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் நகரில் உள்ள நகராட்சி பூங்காவை நியூஸ் தமிழ் எதிரொலியாக ஆய்வு செய்த நகர மன்ற தலைவர், ஆணையாளர் பூங்காவை தினமும் சுத்தமாக வைத்திருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சென்றார். காரைக்குடி ரயில்வே பீடர் சாலை கண்ணதாசன் நகரில் உள்ள நகராட்சி பூங்காவை நகராட்சி நிர்வாகம் நிர்வாகம் முறையாக பராமரிப்பதில்லை என குற்றம்சாட்டிய அதிமுக நகர மன்ற உறுப்பினர் பிரகாஷ், தானே களத்தில் இறங்கி பூங்காவை சுத்தப்படுத்தினார். இதுகுறித்து கடந்த 26 ஆம் தேதி நியூஸ் தமிழில் செய்தி வெளியான நிலையில், நகர்மன்ற தலைவர் முத்துதுரை மற்றும் ஆணையாளர் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டனர்.