ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பனில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து பாலத்தினை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,இன்னும் ஒரு மாதத்திற்குள் பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்கள் இயக்கப்படும் என கூறினார்.