கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள குறுவட்ட நில அளவர் அலுவலகம் சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சிறுபாக்கம் கிராமத்தில் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய குறுவட்ட நில அளவர் குடியிருப்பு மற்றும் அலுவலகம் கட்டப்பட்டது. பொது பயன்பாட்டிற்கு வரும் முன்னரே இந்த கட்டடத்தின் ஜன்னல் கண்ணாடிகளை சமூக விரோதிகள் சேதபடுத்தி உள்ளனர். இதனால் சேதமடைந்த கட்டடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.