புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை மெரினாவில் நள்ளிரவில் ஏராளமானவர்கள் திரண்டனர். புத்தாண்டு பிறப்பதை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட மணி கூண்டின் அருகில் நின்று ஆர்வத்துடன் படம் எடுத்து கொண்டதோடு, சரியாக 12 மணி ஆனதும் ஒருவரை ஒருவர் கைகளை குலுக்கியும், ஆரத்தழுவியும் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.