நெல்லை மாவட்டம் அம்பை அருகே டாஸ்மாக் கடை திறந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டதில் ஈடுபட்ட தமிழக வெற்றிக்கழகத்தினர் உள்பட 50க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். மன்னார்கோவில் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதனால்,தாங்கள் அச்சம் அடைவதாக கூறியும், டாஸ்மாக் கடையை உடனடியாக மூடக்கோரியும் அப்பகுதி பெண்கள் தவெகவினர் ஆதரவோடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.