அதி நவீன வசதியுடன் கூடிய 3 புதிய தாழ்தள அரசு பேருந்து சேவைகளை தொடங்கி வைத்து, அமைச்சர் ஆர்.காந்தி பயணம் செய்தார். ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் ரூ.279 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாலாஜாவில் இருந்து வேலூர் வழியாக ஆற்காடு மற்றும் வேலூரில் இருந்து முத்துக்கடை திருவலம் மார்க்கமாக ஆற்காடு, சோளிங்கர், அதன் வழியாக வாலாஜா கொளத்தேரி கேட் ஆகிய வழித்தடங்களில் அதி நவீன தாழ்தள அரசு பேருந்து இயக்கப்பட்ட உள்ளது. இதனை ஆட்சியர் சந்திரகலா தலைமையில், அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அரசு பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்ததோடு பயணிகளுடன் அமர்ந்து கொண்டு, அமைச்சர் காந்தி பேருந்தில் பயணம் செய்தார்.