தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நடத்தப்பட்ட புதிய கண்டுபிடிப்பு போட்டியில் தேர்வு பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழத்தின் பள்ளிக்கல்வி தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் சார்பில் புதிய கண்டுபிடிப்பு போட்டிகள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு தேர்வான மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். தொடர்ந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது மகனும் இந்த போட்டியில் பங்கேற்று பரிசு பெறுவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்.