கன்னியாகுமரி மாவட்டத்தில், விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி பாலத்தின் 6ஆவது அடுக்கில் புதிய கண்ணாடி பொருத்தப்பட்டது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில், விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளூர் சிலையை இணைக்கும் கண்ணாடி பாலம் 37 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. 10 மீட்டர் அகலம், 77 மீட்டர் நீளத்தில் கடலுக்கு மேல் இந்த கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருகை தருகின்றனர். இந்நிலையில், இந்த கண்ணாடி பாலத்தில், ஒரு கண்ணாடியின் ஆறாவது அடுக்கில், சிறிய அளவிலான விரிசல் ஏற்பட்டது. இது மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு செல்ல தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த கண்ணாடி அகற்றப்பட்டு தொழில்நுட்ப வல்லுனர்கள் முன்னிலையில் புதிய கண்ணாடி பொருத்தப்பட்டது.