புதுச்சேரியில் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்ட நிலையில், சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா இருக்கை மீது ஏறி நின்று பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது. ஆல் பாஸ் முறை தொடர நடவடிக்கை எடுக்கப்படுமா? என சந்திரபிரியங்கா கேள்வி எழுப்ப இந்த ஆண்டு ஆல் பாஸ் முறை உள்ளதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் பதில் அளித்தார்.