நியோ மேக்ஸ் நிதி நிறுவனத்தில் ஏமாந்தவர்கள் அனைவரும் புகார் அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நாளிதழில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விளம்பரம் வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கும் விவரங்களையும், நிறுவனத்தின் ஆவணங்களையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.