தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் நீலகண்ட பிள்ளையார் கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இக்கோவிலில் சித்ரா பௌர்ணமி பெருந்திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு, சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார். பின்னர் ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீலகண்டா, நீலகண்டா என கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.