தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சோத்துப்பாறை அணையில் இருந்து கடந்த மாதம் நீர் திறக்கப்பட்ட நிலையில், பாசனத்திற்கு நீர் செல்லும் புதிய ஆயக்கட்டு வாய்க்காலில் 2 இடங்களில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததால் பாசனத்திற்காக செல்லும் நீர் வீணாக ஆற்றில் கலப்பதாகவும், இதனால் நீர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.