கிருஷ்ணகிரியில் போலி என்சிசி பயிற்சி முகாம் நடத்த சிவராமனுக்கு உதவிய அரசு பள்ளி என்சிசி அலுவலர் கோபு கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன் உட்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் சிவராமன் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் குற்றவாளிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட கோபுவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.