சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். ஆர்வத்துடன் பார்த்த மக்களுக்கு அன்புடன் கைகொடுத்து புன்னகை செய்த இருவரும் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று ஐயப்பனை வழிபட்டனர்.