தென்னக அயோத்தி என போற்றப்படும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள இராமசாமி கோயிலில் நவராத்திரி உற்சவத்தின் 5ம் நாளை முன்னிட்டு, சுக்ரீவன் பட்டாபிஷேக காட்சியை, அழகாக கண்முன்நிறுத்தும் வகையில், அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் ராமாயண காவியத்தில் முக்கிய சம்பவங்களை நினைவு கூறும் வகையில், பொம்மைகளை கொண்டு காட்சிபடுத்தப்பட்டிருந்து. இதனை பக்தர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வழிபாடு நடத்தினர்.