மதுரை, மாடக்குளம் கிராமத்தில் உள்ள கபாலீஸ்வரி அம்மன் கோயிலில், 123ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழா, வரும் 22ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், பந்தக்கால் நடப்பட்டது. வர்ணம் பூசப்பட்ட மூங்கில் கம்புகளில், மாவிலை, வேப்பிலை, தோரணங்கள் கட்டப்பட்ட நிலையில், கோயில் பூசாரி விசேஷ பூஜை செய்த பிறகு கிராமத்தினர் கலந்து கொண்ட நிலையில் கோயில் முன்பு பந்தல்கால் நடும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. பந்தல்கால் நடப்பட்ட பிறகு, மஞ்சள், பால் உள்ளிட்டவை ஊற்றப்பட்டு, தீபாராதனையோடு சிறப்பு பூஜை செய்யப்பட்டது பந்தல்கால் நடப்பட்ட நிகழ்வைத் தொடர்ந்து வரும் 22ஆம் தேதி முதல் கபாலீஸ்வரி அம்மன் விசேஷ அலங்காரத்தில் ஒவ்வொரு நாளும் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.