திண்டுக்கல் அருள்மிகு காளஹதீஸ்வரர் கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, 1000 பொம்மைகளை கொண்டு நவராத்திரிக் கொலு அமைக்கப்பட்டுள்ளது. நவராத்திரி திருவிழாவையொட்டி, கோவில் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோவில் மண்டபத்தில் நவராத்திரி கொலு பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது. இதில், பல்வேறு தெய்வங்களின் பொம்மைகள் இடம்பெற்றுள்ளன. விழாவையொட்டி, அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, நடைபெற்ற நவராத்தி கலை நிகழ்ச்சியில் பெண்கள் மட்டும் பங்கேற்ற வீணைக் கச்சேரி நடைபெற்றது.