விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாளில், ஆண்டாள் மனோரஞ்சிதப்பூ மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருப்பாவை பாடல் பெற்ற தலமான இக்கோவிலில் நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களிலும் ஆண்டாள் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்வு நடைபெறும். அந்தவகையில் 4 ஆம் நாள் மனோரஞ்சிதப்பூ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.