ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு குழாயில் இருந்து திடீரென எரிவாயு கசிவு ஏற்பட்டதால், கிராம மக்கள் பதற்றமடைந்தனர். பூமிக்கு அடியில் இருந்து சேகரிக்கப்படும் குழாய் மூலம் ஒஎன்ஜிசி இயற்கை எரிவாயு சேமிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து குழாய் மூலம் பல்வேறு இடங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது. இந்நிலையில், பனக்குளத்தை அடுத்த சோகையந்தோப்பு பகுதியில், சாலை ஓரத்தில் தேங்கி நின்ற நீரில், குழாயில் ஏற்பட்ட உடைப்பால் இயற்கை எரிவாயு கசிந்தது.