மதுரையில் தேசிய பாதுகாப்பு படையினரின் தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. பாண்டி கோவில் ரிங்ரோடு அருகே உள்ள எல்காட் பூங்காவில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு படையினர் கலந்து கொண்டனர். அதில், தீவிரவாத தாக்குதலை எப்படி தடுப்பது, பிணைக்கைதிகளை மீட்பது போன்ற ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.