பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்கு தேசிய அளவிலான ஒரு கொள்கை வரையறுக்கப்பட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார். டெல்லியிலிருந்து திரும்பியதும் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாலியல் வன்கொடுமைகள் அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.