தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டு போட்டிகளை அமைச்சர் கீதாஜீவன் கொடியைசைத்து துவக்கி வைத்தார். தேசிய கேனாயிங் மற்றும் கயாக்கிங் அசோசியேஷன் மற்றும் தமிழ்நாடு கேனாயிங் மற்றும் கயாகிங் அசோசியேசன் சார்பில் இரு பிரிவுகளாக நடந்த இந்த போட்டியில் இந்தியா முழுவதுதிலிருந்தும் 22 மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் வெற்றி பெறுபவர்கள் சர்வதேச அளவிலான போட்டிக்கு தகுதி பெற உள்ளனர்.