தேசிய அளவில் நீர் மேலாண்மையில் முதலிடம் பிடித்ததன் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு 10 கோடி ரூபாய் நிதி ஆயுக் மூலம் பரிசுத்தொகை வழங்கியிருக்கிறது மத்திய அரசு. இந்தியாவின் 112 மாவட்டங்களுக்கு இடையே நடைபெற்ற மதிப்பீட்டில், வேளாண்மை மற்றும் நீர் மேலாண்மைக்கான முன்னேற்றக் குறியீடுகளில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக மத்திய அரசு அறிவித்து அதற்காக பரிசுத்தொகையாக 10 கோடி ரூபாயையும் வழங்கி இருக்கிறது. இந்தத் தொகையானது மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும். பொதுவாக இது போன்ற நிதிகள் நீர் பாதுகாப்பு, புதிய பாசனத் திட்டங்கள் அல்லது வேளாண் உட்கட்டமைப்பு போன்ற திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வழங்கப்பட்ட சான்றிதழை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்துப் பெற்று. அது தொடர்பான புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ளார்.இதையும் படியுங்கள் : கோமுக்தீஸ்வரர் ஆலய ரதசப்தமி திருவிழாவின் முக்கிய நிகழ்வு