திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையிலிருந்து சுமார் 32 கிலோமீட்டர் வரை செப்பனிடப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குண்டும் குழியுமான நெடுஞ்சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது சாலை புதுப்பிக்கும் பணியால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.