மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சரியான பராமரிப்பு இல்லாததால் எழும் புழுதியால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். திருப்பரங்குன்றத்தை நோக்கி செல்லும் சாலையில், விரிவாக்கம் மற்றும் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அந்த வழியாக அதிக அளவில் செல்லக்கூடிய வாகனங்களால், சாலையில் எழும் புழுதியால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம்போல் காட்சி அளிக்கிறது. இதனால், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.