சென்னையை சேர்ந்த சிறுமி உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார். சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த மாணவி மோனிஷா, தனியார் அகாடமியில் குத்துச்சண்டை பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சிறுவர்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று தங்க பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.