வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சன்பீம் தனியார் பள்ளியில் சூப்பர் கிங்ஸ் அகாடமி என்ற கிரிக்கெட் பயிற்சி மையத்தை இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இளைஞர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.