கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். நாதக சார்பில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்க முயற்சித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், துண்டுப் பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்து மருதமலை அடிவாரத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர்.