புதுச்சேரி, நேரு வீதியில், அண்ணா சாலை போக்குவரத்து சிக்னல் அருகே மிதமிஞ்சிய மது போதையில் இருந்த இளைஞர், போக்குவரத்து காவலரிடம் வாக்குவாதம் செய்து அட்ராசிட்டியில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.மதுபோதையில் இருந்த அந்நபர், சாலையில் போவோர் மீது எச்சில் துப்பியதை போக்குவரத்துக் காவலர் திருஞானமூர்த்தி கண்டித்ததால் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற பெரியகடை போலீசார், போதை தெளிந்தபிறகு மன்னிப்பு கேட்டதால், வழக்குப்பதிவு எதுவும் செய்யாமல் விடுவித்ததாக தெரிவித்தனர். இதையும் பாருங்கள் - தலைக்கேறிய போதையில் எச்சில் துப்பி அராஜகம், வெளியான வீடியோ | Puducherry