மதுரையில் அலட்சியமாக நடைபெற்ற அலங்கார வளைவு இடிப்புப் பணியால் ஜேசிபி ஆபரேட்டர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மாட்டுத்தாவணி பகுதியில் இருந்த நக்கீரர் அலங்கார வளைவு நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று இரவு இடிக்கப்பட்டது. அப்போது, அலங்கார வளைவு தூண் இடிந்து ஜேசிபி இயந்திரத்தின் மீதே விழுந்ததில், ஆபரேட்டரான மதுரை பாரப்பட்டியை சேர்ந்த நாகலிங்கம் உயிரிழந்தார்.