நாகப்பட்டினம் நகராட்சி நகர்மன்ற மாதாந்திர கூட்டத்திற்கு வந்த அதிமுக கவுன்சிலர்கள், திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு, Justice for Ajithkumar என்ற வாசகத்துடன் பேட்ஜ் அணிந்து வந்தனர். அதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால் நகர்மன்ற தலைவர் சமரசம் செய்து வைத்தார்.