ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து 5 மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, புதுச்சேரியின் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல், தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.