வங்கக் கடலில் நிலவும் மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று வீசுவதன் காரணமாக, பிப்ரவரி 26, 27, 28 ஆகிய 3 நாட்களுக்கு நாகை - இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு சுபம் கப்பல் நிறுவனம் சார்பில் தினமும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்த நிலையில், பயணிகள் கப்பல் போக்குவரத்தை வரும் 28-ம் தேதி வரை ரத்து செய்துள்ள அந்த நிறுவனம், மார்ச் 1-ம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து வழக்கம்போல் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.