தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, உறவினர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். நல்லம்பள்ளியை சேர்ந்த பரத்தும், பொம்மிடி அருகே தாசர ஹள்ளியை சேர்ந்த ஸ்ரீபிரியாவும் கடந்த 2019ஆம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் வரதட்சணை கேட்டு பரத்தின் குடும்பத்தினர் ஸ்ரீபிரியாவை அடித்து துன்புறுத்தி கொன்றதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.இதையும் படியுங்கள் : அன்னை மரியாள் பிறப்பு பெருவிழாவின் தேர்பவனி மல்லிகை சரங்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்