கள்ளக்குறிச்சி அருகே மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் உடல் கூறு ஆய்வில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தது தெரியவந்தது. இதனையடுத்து, ஏற்கனவே கள்ளச்சாராய மரண வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது புதிதாக 4 பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். கருணாபுரத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், தியாகதுருகம் சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த தங்கராசுவின், உடல் கூறு ஆய்வில், அவர் மெத்தனால் கலந்த கள்ளச்சாரயம் குடித்தது கண்டுபடிக்கப்பட்டது. இதனையடுத்து, ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள கோவிந்தராஜ் மற்றும் அவரது தம்பி தாமோதரன் மீது போலீஸார் புதிதாக வழக்கு பதிவு செய்து, மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.