கன்னியாகுமரி மாவட்டம் வடலிவிளை கிராமத்தில், அரசு தொடக்கப் பள்ளியில் நள்ளிரவில் புகுந்த மர்ம கும்பல், அங்கிருந்த பொருள்களை அடித்து நொறுக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டடங்களை எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி அண்மையில் திறந்து வைத்தார். இந்நிலையில், பள்ளி வளாகத்தில் புகுந்த மர்ம கும்பல், மது போதையில் அங்கிருந்த பூந்தொட்டிகள், வகுப்பறையில் இருந்த டியூப் லைட்டுகள், மின்விசிறிகள், தண்ணீர் குழாய்கள் உள்ளிட்டவைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.