தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கஞ்சா போதையில் அட்டகாசம் செய்த கும்பலை தட்டிக் கேட்ட வேன் உரிமையாளர் சரமாரியாக வெட்டப்பட்டார். நடராஜபுரம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் கஞ்சா போதையில் வந்த மர்ம கும்பல் அங்கே நிறுத்தி வைத்திருந்த வேன், இருசக்கர வாகனங்கள், வீட்டின் கண்ணாடிகள், ஆகியவற்றை அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்தனர்.