திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் இரண்டு மாதங்களுக்கு முன்பு மாயமான நிலையில், ஆந்திராவில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி காணாமல் போன தினேஷ், ஆந்திரா மாநிலம் சென்னேரி பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.