தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் சைடு லாக்கை உடைத்து எடுத்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சின்னமனூரில் உள்ள சரவணா ஜவுளி கடை முன்பு நிறுத்தி வைத்திருந்த இரண்டு இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். மக்கள் நடமாட்டம் இருந்த போது இருவரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.