சேலம் அழகாபுரம் பகுதியில், 15 வயது பள்ளி மாணவியை மது அருந்த வைத்து அவரது வீட்டிற்கு அருகில் மர்மநபர்கள் இறக்கி விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்மநபர்கள் மாணவிக்கு மது அருந்த வைத்து அழைத்து சென்று அவரது வீட்டிற்கு அருகில் இறக்கி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவியை அவரது பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், மாணவியை இறக்கி விட்டு சென்ற மர்மநபர்கள் யார் என்பது குறித்தும், அவர் ஏதேனும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.