தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் வீடு புகுந்து நகை,கோவில் சிலைகளை கொள்ளையடித்த 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பாரதி நகரை சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் தனது வீட்டில் திருடு போனதாக காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த குமரேசன், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நாகராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருவாரூரில் கோவில் பூட்டை உடைத்து அய்யப்பன் சிலையை திருடியதும், மன்னார்குடியில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து லாக்கர்-ஐ திருடி ஒரு ஏரியில் வீசிச்சென்றதாக வாக்குமூலம் அளித்தனர்.