நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். வள்ளியூர் வடக்கு ரத வீதியை சேர்ந்த பெபின் என்ற இளைஞர் வழக்கம்போல் வீட்டிற்கு வெளியே பைக்கை நிறுத்தி விட்டு உறங்கச் சென்றபோது, இரண்டு பைக்கில் வந்த நபர்கள் திருட்டு சாவியை போட்டு பைக்கை திருட முயன்றனர். பைக் ஸ்டார்ட் ஆகாததால் இரண்டு பைக்குகளின் உதவியுடன் காலால் தள்ளியபடியே பைக்கை திருடி சென்றுள்ளனர்.