வேலூர் மாவட்டம் பரதராமி அருகே வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம் நபர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பரதராமி அடுத்த வீ.மோட்டூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவர் இரவு தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். தொடர்ந்து காலையில் எழுந்து வந்து பார்க்கும் போது இருசக்கர வாகனம் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த சரவணன், பரதராமி போலீசில் புகார் அளித்தார்.