தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள தனியார் நர்சரி தோட்டத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தோட்டத்திற்கு வேலி அடைக்கும் இரும்பு தளவாட பொருட்கள், ஐந்தாயிரம் ரொக்க பணம், அலுவலகத்திற்குள் இருந்த கணினி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.