சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தேவாலயத்தில், பக்தரின் பையை மர்ம நபர் நைசாக திருடி எடுத்துச் சென்றதன் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லில்லி ராஜாதி என்பவர், தனது செல்போன், பணம் மற்றும் வாகன சாவி கொண்ட கைப்பையை தேவாலயத்தின் உள்வளாகத்தில் வைத்து விட்டு வழிபட சென்றபோது, அதனை மர்ம நபர் திருடி சென்றார்.