மதுரை மேலூரில் பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைத்திருந்த தனியார் பேருந்தை மர்ம நபர் திருடி சென்ற நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மேலூரில் இருந்து சிவகங்கை வழியாக மானாமதுரைக்கு செல்லும் அழகுமலையான் என்ற தனியார் பேருந்து மாயமான நிலையில், ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதிக்கு எடுத்து சென்றது தெரியவந்தது. பின்னர் சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.