திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். வீட்டில் பெண் தனியாக இருப்பதை நோட்டம் மிட்ட மர்ம நபர், வீட்டிற்குள் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த பெண் கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் வரும் சத்தம் கேட்டு மர்ம நபர் தப்பிய நிலையில் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபரை போலீஸ் தேடி வருகின்றனர்.