கரூர் மாவட்டம் ஆத்தூர் அருகே கட்டு சேவலை திருடி சென்ற மர்ம நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனியார் டிஜிட்டல் சர்வேயராக பணிபுரிந்து வரும் நிலையில் கொட்டகை அமைத்து 30 கட்டு சேவல்களை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பு கொட்டகைக்குள் புகுந்த மர்மநபர்கள் ஒரு கட்டு சேவலை திருடி சென்றுள்ளனர். இத்திருட்டு சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.