மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 40 கோடி மதிப்பிலான நிலத்தை, மாதம் 3 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு இந்திய மாதர் சங்கத்துக்கு குத்தகைக்கு வழங்க அனுமதியளித்த அரசாணையை எதிர்த்த வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, சம்பந்தப்பட்ட நிலத்துக்கு தற்போது 4 லட்சம் வாடகை நிர்ணயிப்பது தொடர்பாக பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.2011-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை திரும்பப் பெறக் கூறி 2013-ல் அறநிலையத் துறை ஆணையர் அளித்த பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.